பொது மக்கள் பார்வைக்கு பீரங்கி..!!!
மதுக்கரை ராணுவ முகாம் எதிரே, போர்களில் பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மதுரை அருகே ராணுவத்தின், 44வது பாட்டாளியன் முகாம் உள்ளது. இம்முகாமில் எதிர்பகுதியில், 1972ல் வடிவமைக்கப்பட்ட பீரங்கி வாகனம் ‘ஜோராவார்’ மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் தலைமை ராணுவ அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமினை எளிதில் அடையாளம் காணும் வகையில், பல போர்களில் பயன்படுத்தப்பட்டு, 2006ல் ஒய்வு தரப்பட்ட பீரங்கி வாகனம் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கான எண்ணம் உருவாகும் என்று கூறுகின்றனர்.