பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுப்பதாக, விஜய் மல்லையா அறிவிப்பு..!

Default Image
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தப்பி விட்டார். அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக ராஜ்யரீதியிலான அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை தொடர்ந்து ஆவர் லண்டனுக்கு கடந்த 2015ஆம் ஆண்டில் தப்பிவிட்டார்.
அண்மையில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அமலாக்கத்துறை, அவர் வாங்கிய கடன்கள் அனைத்திற்கும், போலி ஆவண ஆதாரங்களை காண்பித்தே கடன்பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், விஜய் மல்லையாவின் 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை அனுமதி கோரியது.
அமலாகத்துறையின் அடுத்தடுத்த அதிரடிகளால் சற்று கலக்கமடைந்துள்ள விஜய் மல்லையா, நீண்ட நாட்களுக்கு பின் மனந் திறந்திருக்கிறார். பொதுத்துறை வாங்கிகளில் தான் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுப்பதாக விஜய் மல்லையா கூறியிருக்கிறார்.
பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் 2016ஆம் ஆண்டில், தனது தரப்பு நியாயத்தை வலியுறுத்தி பலமுறை கடிதம் எழுதியதாகவும் மல்லையா தெரிவித்திருக்கிறார். கடன் பெற்று மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டதாக, தன்னை பற்றி வெளியாகும் செய்திகளால், வெகுஜன மக்களின் கோபத்திற்கு தாம் ஆளாகியிருப்பதாகவும் மல்லையா கூறியிருக்கிறார்.
“2016 ஏப்ரல் 15 அன்று பிரதமர் மற்றும் நிதி மந்திரி ஆகிய இருவருக்கும் கடிதங்கள் எழுதினேன். சரியான கண்ணோட்டத்தில் விஷயங்களை அணுக  இந்த கடிதங்களை பொதுவில் வைக்கிறேன். அவர்களிடம் இருந்து   எந்த பதிலும் கிடைக்கவில்லை, ” என கூறி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்