பைக்ல இதுவும் இருக்க கூடாது : மத்திய அரசு புது உத்தரவு
மோட்டார் வாகன சட்டம் தினம் தினம் புதுபுது சட்டங்களை புகுத்தி மக்களை குழப்ப்புகிறது. இதன்படி, தற்போது கார்கள், மற்றும் இருசக்கர வாகனங்களில் ‘கிரஸ் கார்ட்’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கபடும் தடுப்பு கம்பிகள் பொருத்துவது குற்றம் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
அவ்வாறு புல் பார் பொருத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் 52ஆம் பிரிவை மீறுவதாக அமைகிறது. மேலும் அந்த சட்டத்தின் 190 மற்றும் 191-ம் பிரிவின் படி தண்டனைகுரிய குற்றமாகும். எனவே இதனை உடனடியாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.