பெரும் எதிர்பார்ப்புக்கிடையே காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது!
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது. ஆணையத்திற்கு நிரந்தர அலுவலகம் அமைப்பது, ஊழியர் நியமனம் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உறுப்பினர்களுடன் மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். காவிரி ஆணையத்தின் வரவு- செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆணைய கூட்டத்தில் தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் பங்கேற்கிறார்.