பெருகிவரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் காரணம்…!
உத்தரப்பிரதேசம் ; காந்தியவாதியும், சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என வலியுறுத்தி வருபவருமான அன்னா ஹசாரே உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் மகா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார்.
பெருகிவரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நாட்டில் தற்போது விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் மற்றும் மோசமாகவும் உள்ளதாக குறிப்பிட்ட ஹசாரே மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராய வேண்டும் என்று கூறினார்,
விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு சாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு தான் பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இதுவரை அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார் .மேலும் இதை கண்டித்து வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அறிவித்துள்ளார்…
sources; dinasuvadu.com