பெண்ணின் உயிரைக் காக்க110 நிமிடங்களில் 1,200 கி.மீ தொலைவு கடந்த ‘இதயம்!

Default Image

டெல்லியில் உள்ள 53-வயது பெண்ணுக்கு ,மும்பையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயம் அடுத்த இரண்டரை மணிநேரத்தில் 1200 கி.மீ தொலைக் கடந்து பொருத்தப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

42வயது ஆண் மும்பையில் விபத்தில் சிக்கிய நிலையில் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தார். அவரின் இதயம் டெல்லியில் உள்ள ஒக்லா போர்டிஸ் எஸ்கார்ட் இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 52 வயது பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

மிக விரைவாக மும்பையில் விமானம் மூலம் டெல்லிக்கும், விமானநிலையத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதற்காக மும்பை நகர போலீஸ் ஆணையரிடமும், டெல்லி நகர போலீஸ் ஆணையரிடமும் சிறப்பு அனுமதி பெற்று போக்குவரத்து இடையூறு இல்லாமல் சிக்னலில் நிற்காமல் செல்ல வசதி செய்பட்டது.

நேற்று மாலை 3.15 மணிக்கு  இதன்படி மும்பையில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்பட்ட அந்த ஆணின் இதயம் அடுத்த 110 நிமிடங்களில் டெல்லி விமானநிலையத்தை அடைந்தது. விமானம் தரையிறங்கியதும் அங்குத் தயாராக இருந்த ஆம்புலன்ஸில் டாக்டர்கள் குழுவினர் இதயத்தை பாதுகாகப்பாக எடுத்துக்கொண்டு, டெல்லி போர்டிஸ் மருத்துவமனைக்கு அடுத்த 23 நிமிடங்களில் கொண்டு சென்றனர்.

போர்ட்டிஸ் மருத்துவமனையின் இதயநோய் சிறப்புப் பிரிவு மருத்துவர் எஸ் மேகர்வால்  இது குறித்து கூறியது,மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் டெல்லியில் எங்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் பெண்ணுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பை குளோபல் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட இதயம் விரைவாக மும்பை விமானநிலையத்தையும் அங்கிருந்து 110 நிமிடங்களில் டெல்லியையும் வந்தடைந்தது.

டெல்லி போக்குவரத்து போலீஸாரிடம் ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தோம். அதன்படி எங்களுக்கு விமானநிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை -8 வழியாக முன்ரிகா, மால்வியா நகர், நேருபிளேஸ் வழியாக மருத்துவமனைக்கு இடையூறு இல்லாமல் வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். விமான நிலையத்தில் இருந்து மாலை 5.07 மணிக்கு புறப்பட்டஆம்புலன்ஸ் 23 கி.மீ தொலைவை 23 நிமிடங்களில் அடைந்து மருத்துவமனைக்கு வந்தது.

அங்கு எனது தலைமையிலான மருத்துவர்கள் குழு அந்தப் பெண்ணுக்கு குறித்த நேரத்தில் செய்யப்பட்டது. உலகிலேயே மிகவும் கடினமான சிகிச்சை என்பது இதயமாற்று அறுவை சிகிச்சைதான் இதற்கு நேரம்தான் முக்கியம் அதைச் சரியாக செய்துமுடிக்க அனைவருக்கும் நன்றி. உடலுறுப்பு தானம் எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும். வாழ்ந்துமுடிந்தபின் நம்முடைய உடலில் இருக்கும் நல்ல உறுப்புகள் மண்ணோடு செல்லாமல், அது மற்றவர்களுக்கும் பயன்படுமாறு செய்ய வேண்டும். இப்போது அறுவை சிகிச்சை முடிந்து அந்தப் பெண் ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டார் என்று போர்ட்டிஸ் மருத்துவமனையின் இதயநோய் சிறப்புப் பிரிவு மருத்துவர் எஸ் மேகர்வால்  தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்