கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்களைப்போல உடை அணியும் பெண்களுக்கு திருநங்கைகள்தான் குழந்தைகளாக பிறப்பார்கள் என ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ரஜித் குமார் என்னும் பேராசிரியர் நுண்ணுயிரியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு மற்றும் தனியார் சார்பில் மாணவர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு முகாம்கள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் உரையாற்றிவருகிறார்.
இதுவரை இவர் 1700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பங்கொண்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்களைப்போலவும், ஆண்களின் உடைகளையும் அணியும் பெண்களுக்கு திருநங்கைகள்தான் பிள்ளைகளாக பிறப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கெனவே கேரளாவில் 6 லட்சம் பேர் திருநங்கைகளாக பிறந்துள்ளதாகவும் தெரிவித்தார். பெண்மையை இழிவுப்படுத்தும் பெண்களுக்கும், ஆண்மையை இழிவுப்படுத்தும் ஆண்களுக்கும் அதுபோலதான் பிள்ளைகள் பிறப்பார்கள் என தெரிவித்தார். மேலும் இவர்களுக்கு ஊனமுற்ற குழந்தைகளும், ஆடிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பிறப்பார்கள் என தெரிவித்துள்ளார். பேராசிரியர் ரஜித் குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, ரஜித் குமார் பேசியது குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், அவரை இனிமேல் அரசு சார்பில் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ரஜித் குமார் ஆணாதிக்க கருத்துக்களையும், மூட நம்பிக்கை வளர்க்கும் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவருவதாகவும் தெரிவித்தார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…