” பெட்ரோல் விலையை குறைக்க இதை செய்யுங்கள் ” சொல்கிறார்..முன்னாள் மத்திய அமைச்சர்…!!

Default Image

புதுடெல்லி,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் எட்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 9-வது நாளாக உயர்த்தியுள்ளன. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.மக்களுக்கு கடுமையான தாக்குதலை கொடுத்து வருகின்றது இந்த உயர்வு…

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை, டெல்லியில்  71.15 ரூபாயாகவும், மும்பையில் 75.54 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.00 ரூபாயகவும், சென்னையில் 75.19 ரூபாயாகவும் உள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் பெட்ரோல் விலை 2 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலை 2.42 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தைத் தொட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள் பெட்ரோல் உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையேற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல என்று பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை குறைக்க முடியும் ஆனால்  அதிகப்படியான வரிகளால் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசு நினைத்தால் விலை குறைப்பு சாத்தியமானது தான் அதுவு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவிடும். மேலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்..

 

பெட்ரோல் விலை தொடர்  உயர்வால் முன்னாள் மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு அமோக வரவேற்பு பெற்றுள்ளது..

 

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்