பெட்ரோல், டீசல் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர வாய்ப்பு..! சைக்கிள் வாங்கிக்கோங்க..!
இந்தியாவில் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஈரானில் இருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. மேலும் ஈரானிலுள்ள சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியிலும் இந்தியா மேற்கொண்டுள்ளது.இப்போதுஉள்ள சூழ்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா , ஈரானிலிருந்து கச்ச என்னை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
எனவே, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ஈரானுடன் இந்தியா தொடர்ந்து நல்லுறவு வைத்து கொள்ளுமா? என்று கேள்வியெழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங், பதிலளிக்கையில் கூறியதாவது:- “ ஈரானுடனான உறவை, சுதந்திரமாக இந்தியா முடிவு செய்யும். இதில் 3-ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.குறிப்பாக இப்படி பாதிப்பு நடந்தால் மீண்டும் இதைவிட எதிர்பாராத வகையில் பெட்ரோல், டீசல் விலை உலயரும் அபாயம் உள்ளது.