பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டு சென்ற காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள்!

Default Image

பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டு சென்றனர் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள்.

இரவோடு இரவாக மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் ஹைதரபாத், கொச்சிக்கும்,கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டியுள்ள நிலையில் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கி விட்டது. எம்.எல்.ஏக்கள் விலை போய்விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் கொச்சிக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.

ஆனால் திடீரென மூன்று தனி விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் விமானப்போக்குவரத்துத் துறை தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டு அவர்கள் பேருந்துகள் மூலம் கொச்சிக்குப் புறப்பட்டனர். திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது .

பெங்களூரில் உள்ள ஈகிள்டன் விடுதியில் இருந்தும் ஷங்கரில்லா நட்சத்திர ஓட்டலில் இருந்தும் 58 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலத்த பாதுகாப்புடன் சொகுசுப் பேருந்துகளில் பயணித்தனர்.

முன்னதாக எம்.எல்.ஏக்கள் ஈகிள்டன் விடுதியில் இருந்து புறப்பட இருந்த நிலையில் மாலையில் விடுதியைச் சுற்றி போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.போலீசார் விலகியதும் பாஜகவின் தரகர்கள் விடுதிக்குள் புகுந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பண ஆசை காட்டி வலை விரித்ததாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டு சென்றனர் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள்.இவர்கள் ஹைதராபாத்தின் பஞ்சராஹில்ஸ் பகுதியிலுள்ள தனியார் விடுதிக்கு காங். மஜத எம்.எல்.ஏக்கள் சென்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்