Categories: இந்தியா

பூஸ் அடித்த தீபாவளி…காலை 4-5 மணி , இரவு 9-10 மணி….மீறினால் வழக்கு பதிவு…!!

Published by
Dinasuvadu desk
தமிழகத்தில் காலை 1 மணி நேரம் , மாலை 1 மணி நேரம்  பட்டாசு வெடிக்கலாம்  என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது.
தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி அப்போது நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 23-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் அனைத்து பண்டிகைகளின் போதும் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.இந்தியா பல்வேறு கலாசாரங்கள் அடங்கிய கூட்டாட்சியின் அடிப்படையில் இயங்கும் நாடு ஆகும். ஒவ்வொரு மாநிலமு ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான பாரம்பரியம், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு விளங்குகிறார்கள்.வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. ராமர் போரில் ராவணனை கொன்றதை கொண்டாடும் வகையில் அங்கு கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்த தீபாவளி கொண்டாடுவது வழக்கமாகும். காலையில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் நாள் முழுவதும் தொடரும். மேலும் தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையன்று சதுர்த்ததி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த திதி தீபாவளி அன்று காலை 4 மணிக்கு வருகிறது.
வட மாநிலங்களில் தீபாவளியன்று இரவு தீபம் ஏற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தீபம் ஏற்றாமல் கார்த்திகை பண்டிகையன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது.மேலும் கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும்.எனவே, தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி தமிழ்நாட்டுக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான திருத்தம் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்கிழமை ( நேற்று ) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
தமிழகம் உள்பட  தென்மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரம் மாற்றும் தமிழக அரசின் கோரிக்கையை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்து,தமிழகத்தில்  2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் . எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் அளித்த விளக்கத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலை 4 மணி முதல் 5 மணி வரையும் , இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் வெடி வெடித்துக்கொள்ளலாம் என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.2 மணி நேரத்தை மீறி வெடி வெடித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவுறுத்துள்ளது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி… பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.!

மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி… பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.!

 டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

23 minutes ago

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…

48 minutes ago

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

2 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

2 hours ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

3 hours ago