பூனைகளும், நாய்களும், கீரிகளும், பாம்புகளும் மோடியை எதிர்க்க கும்பலாக சேர்ந்துள்ளன…!அமித்ஷா……

Default Image

அமித்ஷா, எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பாஜக-வை எதிர்க்கும் முயற்சியை, பூனைகளும், நாய்களும், கீரிகளும் பாம்புகளும் பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக கும்பலாக சேர்ந்திருப்பதாக  விமர்சித்துள்ளார்.

பாஜக-வின் 38ஆவது நிறுவன தினத்தையொட்டி, மும்பையில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என பிரச்சாரம் நடப்பதாகக் குறிப்பிட்டார். பெருவெள்ளம் ஏற்படும்போது பாம்புகளும் கீரிகளும் பூனைகளும் நாய்களும், சிங்கம், புலிகளும் மரத்தின் மீது ஏறிக்கொண்டு, உயரும் நீர்மட்டத்தை பார்த்து அஞ்சும் எனவும் அவர் கூறினார்.

உலகின் மிகவும் புகழ்பெற்ற பிரதமர் மோடி என்றும், அவரது அரசின் சாதனைகளை பரப்பி, 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு களம் அமைக்குமாறும் தொண்டர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்தார். இடைத்தேர்தலில் 2 மக்களை தொகுதிகளில் வெற்றிபெற்றதை கொண்டாடும் ராகுல் , 11 மாநில அரசுகளை இழந்துள்ளதை பற்றி என்ன நினைக்கிறார் என கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்