புலிக்காக போராட்டம்…போலீசாருடன் வாக்குவாதம்…!!
‘அவ்னி’ புலி சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சிவாஜிபார்க்கில், நேற்று பொதுமக்கள் தடையை மீறி பேரணி நடத்தினார்கள்.
‘அவ்னி’ புலி சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சிவாஜிபார்க்கில், நேற்று பொதுமக்கள் தடையை மீறி பேரணி நடத்தினார்கள். முன்னதாக அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது.யவத்மால் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 13 பேரை வேட்டையாடியதாக கூறப்படும் அவ்னி என்ற பெண் புலியை அண்மையில் வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரியான மேனகா காந்தியும் பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த பிரச்சினையில் மாநில வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாருக்கும், மத்திய மந்திரி மேனகா காந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பதவி விலகும்படி கூறினார்கள்.
பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது பூதாகரமாகி உள்ளது. புலி சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நேற்று மாலை தாதர் சிவாஜி பார்க்கில் பேரணி நடத்துவதற்கு பொதுமக்கள் திரண்டனர். இதுபற்றி அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து, அனுமதி பெறாமல் பேரணி நடத்த கூடாது என்று கூறினார்கள்.
இதை கேட்டு கோபம் அடைந்த, அங்கு திரண்டு இருந்தவர்கள் போலீஸ் அதிகாாிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.இருப்பினும் போலீசாரின் தடையை மீறி அவர்கள் சிவாஜி பார்க்கில் பேரணி நடத்தினார்கள்.இதில் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமும் கலந்து கொண்டார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட அவ்னி புலியின் 2 குட்டிகளை பாதுகாக்கும்படியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
dinasuvadu.com