ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று டெல்லியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் நோக்கி புறப்பட்டது. அதில், 128 பயணிகள் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்பினார் விமானி.
டெல்லியில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினார். இதையடுத்து டெல்லியில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு குறித்த நேரத்தில் கண்டறியப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட 40 நிமிடத்தில் ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டதால் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…