புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் சேத மதிப்பீடு செய்யும் பணிகள் தீவிரம் ..!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் சேத மதிப்பீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் கஜா புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. காரைக்காலில் 90 சதவீத பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது .அங்குள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் சேத மதிப்பீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.