புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு – கிரண்பேடி
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலில் கலக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்கள் பாதிக்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்