புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 27 வரை நடக்கும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய போது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சியினர் புகார் செய்தனர். கடும் அமளிக்களுக்கிடையே முதல்வர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. 2018-19 ஆம் ஆண்டிற்கு திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்களுக்கு ரூ.7,530 கோடி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கியில் கடன்பெற்ற விவசாயிகள் முறையாக கடனை செலுத்தும்போது அரசு 4% தள்ளுபடி செய்யும் என பட்ஜெட்டில் அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…