புதுச்சேரியில் கோயில் சொத்துக்கள் ஆவணப்படுத்தப்படும்! முதல்வர் நாராயணசாமி
கோயில் சிலைகள், கோயில் நகைகள் மற்றும் கோயில் சொத்துக்கள் உள்ளிட்டவை புதுச்சேரியில் ஆவணப்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அரசின் வருவாய் உயரும் வகையில் புதுச்சேரியில் வியாபாரிகள் முறையாக வரிசெலுத்த வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,861 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டியால் ஏற்பட்ட இழப்புக்கு மத்திய அரசு ரூ.333 கோடி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.