புதிய யுத்தியில் மகாராஷ்டிரா அரசு !பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மும்பையை மாற்ற நடவடிக்கை!
மகாராஷ்டிரா அரசு ,பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மும்பையை மாற்ற, 250 கோடி ரூபாய் செலவில் ட்ரோன்களை வாங்க முடிவு செய்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளை கண்காணிக்க ட்ரோன்கள் வாங்கப்படும் என்றும், இந்த ட்ரோன்களுக்காக பிரத்யேகமாக செல்போன் ஆப் ஒன்று தயாரிக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது. இந்த ஆப்பை செல்போனில் பதிவிறக்கம் செய்துவைக்கும் பெண்கள், ஆபத்து நேரத்தில் அதிலுள்ள பொத்தானை அழுத்தினால், உடனடியாக அருகாமை காவல்நிலையங்களில் உள்ள ட்ரோன்கள் தானாக இயங்கி, ஆப் காட்டும் வழித்தடத்தில் பயணித்து, சம்பவ இடத்தை அடையும் என்றும் கூறப்படுகிறது. இதனால், ஆபத்தில் சிக்கியுள்ள பெண்ணின் இருப்பிடத்தை போலீசார் விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.