புதிய முறை பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு அறிமுகம்!
மத்திய அரசு, நாடு முழுவதும் பேராசிரியர்கள் பதவி உயர்வுக்காக இனி புதிய முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், இதுவரை அவர்கள் வகுப்புகள் எடுக்கும் முறை, பணிமூப்பு, ஆய்வு நூல்கள் ஆகியவற்றை பொறுத்து பணி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. இனி அதற்குப் பதிலாக, புதிதாக தேர்வு ஒன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தற்போது இருந்துவரும் நடைமுறை கைவிடப்பட உள்ளது. புதிய முறை 2022ம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.