புதிய பாதுகாப்பு விதிகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்த உள்துறை அமைச்சகம்!
உள்துறை அமைச்சகம் ,பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி பிரதமருக்கான சிறப்புப் பாதுகாப்புப் படையில் உள்ள நெருக்கமான பாதுகாப்புக் குழுவினரின் எண்ணிக்கை விரிவு படுத்தப்பட்டுள்ளது.
சிறப்புப் பாதுகாப்புப் படையில் இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் , நெருக்கமான பாதுகாப்புக் குழு என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிரதமர் மாநிலங்களுக்கு செல்லும்போது அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.