பீகாரில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீவிபத்து!
100-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பாட்னா புறவழிச்சாலையில் உள்ள கிடங்கில் ஊழியர்கள் சிலிண்டர்களை லாரியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தனர்.
450 சிலிண்டர்கள் வரை இருந்த அந்த லாரியில், ஒரு சிலிண்டர் மட்டும் கை தவறி விழுந்து உருண்டு, ஏற்கெனவே சூடாக இருந்த லாரியின் சைலன்சரில் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிலிண்டரும், லாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களும் வெடித்துச் சிதறி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
அருகில் இருந்த ரசாயனக் கிடங்கிலும் தீ பரவியது. 6 தீயணைப்பு வாகனங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர். இதில் தீயணைப்பு வீரர்கள் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.