பீகாரில் கார் குளத்திற்குள் விழுந்து விபத்து..!
அராரியாவின் தாராபாடி பகுதியில் கார் குளத்திற்குள் பாய்ந்து விபத்து நேரிட்டு உள்ளது. விபத்தில் சிக்கிய 6 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு உள்ளது.
குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தற்செயலாக நடந்ததா? இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என போலீஸ் சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.