பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட் விண்ணில் பாய்தது ….!!
31 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட் 28 மணி நேர கவுண்டவுனுக்கு பிறகு விண்ணில் ஏவப்பட்டது.380 எடை கொண்ட ஹைசிஸ் செயற்கைகோள் வனப்பகுதி , நிலப்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும்.அதேபோல செம்மரக்கட்டை கடத்தல் , மாவோய்ஸ்ட் நடமாட்டம் , வானிலை சீதோஷண நிலை என அனைத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் சிறப்பம்சம் கொண்டது. பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.380 கிலோ எடை கொண்ட இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள்
ஹைசிஸ் வகை செயற்கோள் அமெரிக்கா ஆஸ்திரேலியா , கனடா 8 நாடுகளில் அனுப்பப்பட்டுள்ளது.இந்த செயற்கைகோள் 5 ஆண்டுகளுக்கு புகைப்படங்களை துல்லியமாக அனுப்பும்.இதில் இணையதள வேகத்தை அதிகப்படுத்துவதற்கான செயற்கைகோள்களும் செலுத்தப்படதும் குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com