பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது…!!
31 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் புதன்கிழமை தொடங்கியது. இந்த ராக்கெட்டில் இந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோளும், அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன.
இதில் இந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, நீர் நிலை உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்கும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இணையதள வேகத்தை அதிகப்படுத்துவதற்கான செயற்கைகோள்களும் செலுத்தப்பட உள்ளன.
dinasuvadu.com