பிறந்து 244 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து புதிய கின்னஸ் உலக சாதனை..!

Default Image

உத்தர பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை துறையின் தலைவராக இருப்பவர் மருத்துவர் ரிஸ்வான் அகமது கான்.

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி ரியா குமாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கான் தலைமையிலான மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 21ல், பிறந்து 244 நாட்கள் ஆன அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஒன்றை நடத்தியது. இதில், 3 பித்த கற்கள் நீக்கப்பட்டன. அதனுடன் பித்தப்பையும் நீக்கப்பட்டன.

அது சிகிச்சைக்கு பின் முழுவதும் நலமடைந்து உள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த பின் மருத்துவ அதிகாரிகள் இதுபற்றி கின்னஸ் புத்தக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கடந்த 6 மாதங்களில் பெண் குழந்தை தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்து இறுதியில் தங்களது வலைதளத்தில் சாதனையை பதிவிட்டுள்ளனர்.

இதற்கு முன் பிறந்து 271 நாட்கள் ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தது கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. அதனை இந்த சாதனை முறியடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்