பிரேசில் கோட்டையாக மாறிய கேரளா…!
உலகம் முழுவதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் நிலையில் அதன் பாதிப்பு பரவி வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் பிரேசில் நாட்டின் ரசிகரான ஒருவர் தமது வீடு முழுவதையும் பிரேசில் கொடியின் வண்ணத்தால் பெயின்ட் செய்துள்ளார்.
வீட்டின் பெயரையும் ஹவுஸ் ஆப் பிரேசில் என்று அழைத்துக் கொள்ளும் அவர், வீட்டின் ஜன்னல், கதவுகள், மட்டுமின்றி அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் யாவையும் பிரேசில் விளையாட்டு வீரர்கள் படங்களுடன் அந்நாட்டு கொடியின் வண்ணத்தில் மாற்றியுள்ளார்.
இதனிடையே கொல்கத்தாவில் உள்ள ஒரு பேக்கரியில் உலகக் கோப்பையை முன்னிட்டு பல வகையான கேக்குகளும் இனிப்புகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. கால்பந்து போன்ற பிரம்மாண்டமான கேக் காண்போரை கவர்ந்தது. அர்ஜண்டினா ரசிகரான பேக்கரி உரிமையாளர் தனதுவீட்டை அதன் வண்ணத்தில் மாற்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.