பிரமோஸ் ஏவுகணை மேம்படுத்தப்பட்ட சோதனை வெற்றி!
பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வழிநடத்து தொழில்நுட்பத்துடன் கூடிய சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானிலிருந்துகாலை 8.42 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை திட்டமிட்ட பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கியதாக, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமது ட்விட்டர் பதவில் தெரிவித்துள்ளார்.
ஒலியின் வேகத்தை விஞ்சும் சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ரஷ்யாவின் தொழில் நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் கடலிலிருந்து ஏவத்தக்க பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், சுகோய் ரக விமானங்களிலிருந்து ஏவும் சோதனை கடந்த நவம்பரில் முதன்முறையாக நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.