பிரபல தெலுங்கு நடிகர் மோடிக்கு எச்சரிக்கை !பிரதமர் மோடி ஒரு பச்சைத் துரோகி !

Default Image

ஆந்திர  நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலத்துக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார், அவர் ஒருதுரோகி , ஏமாற்றுக்காரர் என்று  கடுமையாக சாடியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு 4 ஆண்டுகளாகியும் வழங்கவில்லை. இதையடுத்து, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இருந்து தெலங்கு தேசம் கட்சி வெளியேறியது, அமைச்சரவையில் இருந்தும் வெளியேறியது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரக்கோரி நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.ஆனால், நாடாளுமன்ற முடக்கம் காரணமாக, அந்த நோட்டீஸ் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், ஆந்திரமாநிலத்துக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்காகவும், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளான நேற்று விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹிந்துபுர் தொகுதியின் எம்எல்ஏவும், நடிகருமான பாலகிருஷ்ணா பேசியதாவது:

ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம் எனக் கூறி 4ஆண்டுகளாக மத்தியில் ஆளும்பாஜக அரசு நம்மை ஏமாற்றிவிட்டது. ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார். நமக்கும், மத்தியஅரசுக்கும் இடையிலான போர் தொடங்கிவிட்டது. பிரதமர் மோடியின் மர்மமான அரசியல் சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் ஆந்திராவில் நடக்காது. வரும் நாடாளுமன்றத்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது.

ஆந்திர பிரதேசத்தை குஜராத் என்று மோடி நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவர்களின் ஆட்சி இங்கு நடக்காது. தெலுங்கு பேசும் மக்கள் மிகுந்த துணிச்சல் மிக்கவர்கள். கடந்த 1984ம்ஆண்டு என்டிஆர் அரசை கலைக்கும் போது, காங்கிரஸ் அரசுக்கு தாங்கள் யாரென்று இந்த மாநில மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

இப்போது ஆந்திர மக்கள் மட்டும் மோடிக்கு எதிராக இல்லை, இந்த நாடே மோடிக்கு எதிராக கிளம்பி இருக்கிறது.இப்போது நான் சொல்கிறேன், மோடி நீங்கள் ஒரு துரோகி, ஒரு ஏமாற்றுக்காரர். துணிச்சலாக வெளியே வந்து மக்களைச் சந்தியுங்கள். அவர்களிடம் பேசுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் எங்கு சென்றாலும் மக்கள் உங்களை துரத்தி துரத்தி அடிப்பார்கள். நீங்கள் எந்தவிதமான பதுங்கு குழியில் இருந்தாலும் மக்கள் உங்களை விடமாட்டார்கள் என்று பாலகிருஷ்ணா பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records