பிரதமர் மோடியை சந்திக்க குமாரசாமி முயற்சி..!
காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை அளித்துள்ளார்.
காவிரி ஆணையத்துக்கு இன்னும் பிரதிநிதிகளை நியமிக்காத நிலையில், பிரதமரிடம் இதுகுறித்து நேரில் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
சித்தராமையா அரசு இடைக்கால பட்ஜெட்டை ஏற்கனவே தாக்கல் செய்திருப்பதால், துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தால் போதும் என்று கர்நாடக காங்கிரஸ் தரப்பு கூறுவதால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராகுலுடன் குமாரசாமி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.