பிரதமர் மோடியை காங்கிரஸ் மதிக்கிறது : ராகுல்காந்தி பேச்சு
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத் பிரச்சார கூட்டத்தில் பேசிய போது,
‘எங்கள் காங்கிரஸ் கட்சியானது பாரத பிரதமர் மோடியை மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதம மந்திரி பதவிக்கு காங்கிரசு மரியாதை செலுத்துகிறது. தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கட்சியில் யாரும் அவருக்கு எதிராக பேச முடியாது. பிரதம மந்திரி மோடியும் எங்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது, நாங்கள் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.’என கூறினார்.
எனினும், பாரதிய ஜனதா கட்சி மீது தனது தாக்குதலை தொடர்ந்தார். மேலும் அவர் கூறுகையில், ‘பாஜக குஜராத் நலனுக்காக தேர்தல் அறிக்கை வெளியிட தயாராக இல்லை. பா.ஜ.க. உங்களுக்காக எதாவது செய்யும் என்று நினைக்கிறீர்களா , அது ஒன்றும் உங்களுக்கு செய்யாது.
தேர்தலில் வெற்றி பெற்ற 10 நாட்களில் காங்கிரசு கட்சி விவசாயி கடன் தள்ளுபடிக்கு ஒரு கொள்கை வகுக்கும்.’ என்று கூறினார். மேலும் குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ராகுல் நம்பிக்கை நிறைந்த பேச்சில் தெரிவித்தார்.