பிரதமர் மோடியுடன்..! நடிகர் மோகன்லால் நேற்று திடீர் சந்திப்பு…!!
பிரதமர் மோடியை கேரளா நடிகர் மோகன்லால் நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி,நேற்று மோகன்லால் ஜி உடன் அற்புதமான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அவரது பரந்த சமூக சேவை முயற்சிகள் கவனிக்கத்தக்க மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.நடிகர் மோகன்லால் கட்சியில் சமீப காலத்தில் பாஜகவுடன் இணக்கம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்கு, மோகன்லாலும் இசைவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு, சவலாக உருவெடுப்பார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU