பிரதமர் மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மமானவை….ராகுல் காந்தி சாடல்…!!
பிரதமர் மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மம் நிறைந்தவை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 நாட்கள் கழித்தே வாக்கு இயந்திரங்கள் சேகரிப்பு மையத்துக்குச் சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இது குறித்து தனது டுவிட்டரில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மமான வேலைகளைச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதனால், காங்கிரஸ் தொண்டர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.