பிரதமர் மோடியால் தான் அமைச்சர்கள் பொய் பேசுகிறார்கள் : ராகுல் குற்றச்சாட்டு..!
எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
பிரதமர் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்னை பார்க்க தவிர்க்கிறார் அவர் 15 லட்சம் மற்றும் 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றிவிட்டார் .இது மட்டுமில்லை பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன தேசத்துக்கு எதிராக மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கிறது .பின்னர் அவையில் பேசிக்கொண்டே இருந்தவாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் சென்று அவரை கட்டிப் பிடித்தார்.இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
மேலும் அதிக விலை கொடுத்து போர் விமானங்களை மோடி அரசு வாங்குவதாகவும் இதனால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “இந்தியா பிரான்ஸ் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என பிரான்ஸ் அதிபர் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்” என்று பேசினார்.கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடனிருந்தார். என்றும் பிரதமர் மோடி கொடுக்கும் அழுத்தத்தால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் பேசுகிறார் ” ராகுல் காந்தி குற்றச்சாட்டு