பிரதமர் நரேந்திர மோடி விவசாயி தற்கொலைக்கு காரணம் ? கடிதம் எழுதிவைத்து இறந்த விவசாயி …!
பிரதமர் நரேந்திர மோடி தான் மராட்டியத்தில் விஷம் குடித்த விவசாயி ஒருவர் தமது தற்கொலைக்கு காரணம் என கடிதம் எழுதிவைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
யவத்மால் மாவட்டத்தில் உள்ள ரஜூர்வாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் பாவ்ராவ் சாய்ரே (Shankar Bhaurao Chayre) எனும் விவசாயி 9 ஏக்கரில் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி பருத்தி பயிரிட்டிருந்தார். ஆனால் பூச்சி பாதிப்பின் காரணமாக பயிர் வீணானதால், கடன் தள்ளுபடிக்காக காத்திருந்தார்.
ஆனால் கடன் தள்ளுபடி செய்யப்படாத நிலையில், தமது தற்கொலைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியே காரணம் என கடிதம் எழுதிவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.