ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தை இரு நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்ய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோசி ( sochi ) நகருக்கு திங்கட்கிழமை செல்ல இருப்பதையும், அதிபர் புதினுடனான சந்திப்பையும் எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்க கூடியது என்றும் பிரதமர் கூறியுள்ளார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற இருக்கும் இந்த சந்திப்பிற்குப் பின் அன்றைய தினமே பிரதமர் மோடி நாடு திரும்ப இருக்கிறார்.
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…