பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனை அமைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் ! ராகுல்காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைப்பதாக அளித்த வாக்குறுதியைப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்குச் சென்றபோது, அங்குள்ள இரும்பாலை மருத்துவமனை பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும் என்றும், பிராமணி ஆற்றில் பாலம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். அந்த வாக்குறுதிகள் குறித்துப் பிரதமருக்கு நினைவூட்டுவதற்காக முக்திகாந்த் பிஸ்வால் என்கிற இளைஞர் ரூர்கேலாவில் இருந்து டெல்லிக்கு 1350கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆக்ரா வந்தபோது மயக்கமடைந்த முக்திகாந்த் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலை அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நிறைவேற்றாத அந்தத் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.