பிரதமர் நரேந்திர மோடி போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசனை!
பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
போர்நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று காஷ்மீரில் உள்ள கட்சிகள் ஒருமித்த குரலில் கேட்டுக் கொண்டுள்ளன. காஷ்மீரில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள், பத்திரிகையாளர் மற்றும் ராணுவ வீரர்களின் கொடூர கொலைகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது சாத்தியம் தானா என்று பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஒரு மாத சண்டை நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வருவதால், இதுகுறித்து பிரதமரின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.