பிரதமர் நரேந்திர மோடி பொய்ச் செய்தி தொடர்பான அரசு ஆணையை திரும்பப் பெற உத்தரவு…!
பிரதமர் நரேந்திர மோடி பொய்ச் செய்தி தொடர்பான அரசு ஆணையை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த விவகாரம் பிரஸ் கவுன்சில் மூலமாக தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
முதல்முறை பொய்ச்செய்தி வெளியிட்டால் 6 மாதங்களுக்கும், இரண்டாவது முறையாக பொய்ச்செய்தி வெளியிடும்போது ஓராண்டுக்கும், மூன்றாவது முறையாக மீறும்போது நிரந்தரமாகவும் சம்மந்தப்பட்ட செய்தியாளரின் அங்கீகார அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பொறுப்பில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட ஆணையில் அறிவிக்கப்பட்டது.
இது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி என எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பொய்ச்செய்தி தொடர்பான ஆணையை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும்,பிரதமர் நரேந்திர மோடி பொய்ச்செய்தி விவகாரத்திற்கு பிரஸ் கவுன்சில் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.