பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு!
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நலன் குறித்து வெளியுறவுத்துறையிடம் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்திலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சென்னை பக்தர்கள் 19 பேர் சிக்கி உள்ளனர்.மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர்.
பின்னர் நேபாளம் சிமிகாட் நகரில் இருக்கும் தமிழக பயணிகளை வர்த்தக விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கியது. இந்திய அரசின் முயற்சியால் வர்த்தக விமானங்களை சிமிகோட்டுக்கு அனுப்பியது நேபாள அரசு.