பிரதமர் நரேந்திர மோடி நாளை யோகாசன நிகழ்ச்சிக்காக டேராடூன் செல்கிறார் !
பிரதமர் நரேந்திர மோடி நாளை சர்வதேச யோகா தினத்தையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு வருவதையொட்டி, அங்கு சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், பாம்புகளைப் பிடித்து இடத்தை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
டேராடூன் வனஆராய்ச்சி மைய வளாகத்தில் பிரதமர் பங்கேற்கும் யோகாசன நிகழ்ச்சிக்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் காட்டுப் பகுதி என்பதால், வனவிலங்கு ஊழியர்கள் அங்கு நடமாடும் பாம்புகளையும், சுற்றித் திரியும் குரங்குகளையும் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுந்துக் கிடக்கும் மரங்கள், கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அங்கு நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பாம்புகள் சிக்கியபோதும், குரங்குகள் ஏதும் சிக்காமல் தப்பிவிட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.