பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெஷல் டயட்டில் இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், தினமும் 2 கிலோ விமர்சனத்தை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் கலந்துரையாடிய அவர், தாம் எப்போதும் விமர்சனங்களை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். விமர்சனங்களுக்கு தாம் எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அவை தங்கச்சுரங்கம் போன்றவை எனவும் அவர் கூறினார். விமர்சனங்களைப் பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும், விமர்சனங்களே விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருக்க உதவுவதாகவும் மோடி தெரிவித்தார். ஆனால், இப்போது விமர்சனங்கள் வெறுமனே குற்றச்சாட்டுகள் அளவுக்கு தாழ்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெஷல் டயட்டில் இருப்பதாகவும், தினமும் 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே தமது ஆரோக்கியத்தின் ரகசியம் எனவும் பிரதமர் தெரிவித்தார். தாம் வறுமையில் வாழ்ந்தவன் என்பதால், புத்தகத்தை படித்து தான் வறுமையை தெரிந்துகொள்ள வேண்டியதில்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…