பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் சி ஜின்பிங்குடன் சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடி ,சீனா சென்றுள்ள நிலையில் ஊகான் நகரில் அந்நாட்டு அதிபர் சி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றிரவு சீனா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் Hubei மாகாண அருங்காட்சியகத்திற்கு சென்றார். அங்கு சீன அதிபர் சி ஜின்பிங் பிரதமர் மோடியை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்ட தலைவர்களை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
பின்னர் ஊகான் விருந்தினர் மாளிகையில் சீன அதிபருடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இருநாட்டு கலாச்சாரங்களுமே நதிக்கரைகளில் வளர்ந்தவைதான் என பிரதமர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஊகானில் உள்ள Three Gorges அணைகள் கட்டப்பட்ட விதம் தம்மை வெகுவாக கவர்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர், குஜராத் முதலமைச்சராக இருந்த போது அணைகளை பார்வையிட தான் வந்ததையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.