பொதுமேடையில் பிரதமர் மோடி கொலை செய்யப்படுவார், இந்தியா சிதைக்கப்படும் என்று தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ராவல்கோட் எனும் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிரசங்கம் நடைபெற்றது, இதில் 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தோற்றுவித்த ஜமாத்-உத்-தாவா (JuD) எனும் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மவுலானா பஷீர் அகமது காக்கி என்பவர் அங்கு திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, இந்தியா மற்றும் அமெரிக்காவில் இஸ்லாமியக் கொடி பறக்கவிடப்படும் என்றும் பிரதமர் மோடி கொலை செய்யப்படுவார் என்றும் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜிகாத் எனப்படும் புனிதப் போருக்காக நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் ஜிகாத்தில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களுக்காக சொர்கத்தின் வாசல் திறந்தே இருக்கிறது என்றும் கூறினார்.
ஜமாத்-உத்-தாவா அமைப்பு, ஜிகாத்தில் ஈடுபடுபவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது என்றும் காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிராக ஜிகாத்தில் ஈடுபட்டுவருவதாகவும், காஷ்மீருக்கு விடுதலை அளிப்பதோடு, இந்தியாவை சிதைக்கவே இதில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
உங்களுடைய மகன்கள் மற்றும் பணத்தை ஜிகாதிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு இக்கூட்டத்தில் உள்ள பெண்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் மவுலானா பஷீர் அகமது காக்கி பேசினார்.
கடந்த மே மாதம் பிரதமர் மோடியை கொலை செய்யும் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகளில் செயலை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…