பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27 ஆம் தேதி சீன பயணம் !
பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து முக்கியப் பேச்சு நடத்த உள்ளார்.
ஷாங்காய் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுஷ்மா ஸ்வராஜ் நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ (Wang Yi), சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவின் வுஹான் (Wuhan) நகரில் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்திக்க இருப்பதாக வாங் இ தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இருநாட்டு உறவில் முக்கிய மைல் கல்லாகவும் இருக்கும் என வாங் இ தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.