பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் ,மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் முன்னணி குஜராத்தி நாளிதழ் ஒன்றில் பிரதமர் மோடியைத் திருமணமாகாதவர் என்று பேட்டியளித்தது குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மோடியின் மனைவி கூறியதாவது:
நரேந்திர மோடிக்கு திருமணம் ஆகவில்லை என்று ஆனந்திபென் கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தேன், 2004 தேர்தல்களின் போது வேட்பிமனுத்தாக்கலின் போது தான் திருமணமானவர் என்று அவரே கூறியதோடு என் பெயரையும் குறிப்பிட்டார்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “படித்த ஆனந்திபென் இவ்வாறு கூறுவது சரியல்ல. தன் குருவைப் பற்றி அவர் இவ்வாறு கூறுதல் கூடாது. இது மட்டுமல்ல அவரது செயல்கள் பிரதமரின் பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளது. எனக்கு அவர் (மோடி) மீது நிரம்ப மதிப்பு உண்டு, அவர் எனக்கு ராமர்” என்று வீடியோவில் தெரிவித்தார்.
இந்த வீடியோ உண்மைதான், மோடியின் மனைவி யசோதாபென் தான் அதில் பேசினார் என்று அவரது சகோதரர் அஷோக் மோடி உறுதி செய்தார்.
“ஆனந்திபென் இவ்வாறு கூறியதை நாங்கள் முதலில் நம்பவில்லை. ஆனால் முன்னணி நாளிதழான திவ்யா பாஸ்கரில் ஜூன் 19ம் தேதி முதல் பக்கத்திலேயே இது செய்தியாக வந்தது. எனவே இது தவறான செய்தியாக முடியாது.
அதனால்தான் அவருக்கு மறுப்பு தெரிவிக்க முடிவெடுத்தோம்” என்று விளக்கம் அளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…