பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து….!
பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும், கிறிஸ்தவ மக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒற்றுமை, அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கு வலிமை கூட்டும் சிறந்த நாள் என்பதை நம்புவதாக கூறியுள்ளார்.
இயேசு பிரானின் புனித எண்ணங்களும், கொள்கைகளும் சமுதாயத்திற்கு பல்வேறு நேர்மறை சேவைகளை செய்ய மக்களை ஊக்கப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.