பிரதமர் நரேந்திர மோடி ஈராக்கில் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு …!

Default Image

ஈராக்கின் முசோலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார் பிரதமர் மோடி

ஈராக்கின் மொசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.

அவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், 39 இந்தியர்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக, கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். இதனால், 39 இந்தியர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவருமாறு அவர்களது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, நேற்று டெல்லியில் இருந்து ஈராக் சென்ற வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்,இன்று அந்நாட்டு அரசு உதவியுடன் விமானம் மூலம் 38 பேரின் உடல்களை கொண்டு வந்தார்.

இந்நிலையில் ஈராக்கின் முசோலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார் பிரதமர் மோடி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்