இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் சென்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் தெரசா மே மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். கடந்த 17-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் இங்கிலாந்தில் தங்கி இருந்த மோடி, அங்கிருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டார். ஜெர்மனியின் பெர்லின் நகரில், அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்து பிரதமர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏஞ்சலா அளித்த விருந்திலும் பங்கேற்ற மோடி, சனிக்கிழமை காலை தாயகம் திரும்புகிறார்.