இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மாவோயிஸ்ட் சிந்தனையாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளர் வழக்கறிஞரான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்ட்டிர காவல்துறை 5 சமூக ஆர்வலர்களுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய, சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை ஏ.டி.ஜி.பி. பாரம் பீர் சிங் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கும், மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்புள்ளது என்பதை தெளிவாக காட்டுவதாக கூறியுள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாகவும், இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
DINASUVADU
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…